News August 13, 2024

அம்பேத்கர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்தாரா?

image

சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்வது தவறில்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, அம்பேத்கரே உள் ஒதுக்கீட்டை ஏற்கவில்லை என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கின. ஆனால், 1936ஆம் ஆண்டு மாநாடு ஒன்றில் பேசிய அவர், “பம்பாய் மாகாணத்தில் மகர் சாதியினருக்கு வழங்கப்படும் 15 இடங்களில் ‘மாங்க்’ சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தயார்” என்று பேசினார்.

Similar News

News March 4, 2026

BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,120 குறைந்து ₹1,21,600-க்கும், கிராமுக்கு ₹265 குறைந்து ₹15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News March 4, 2026

ராஜ்யசபா MP யார்? EPS இன்று முடிவு

image

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் EPS இன்று ஆலோசனை செய்யவிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளர் என்று முடிவு எடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய வாக்குறுதிகள், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது, தேர்தல் பணிகள், நலத்திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

News March 4, 2026

கிளம்பினார் விஜய்

image

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் சற்றுமுன் புறப்பட்டார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கிடையில், தவெக கூட்டத்தில் பங்கேற்க காலையில் இருந்து தவெகவினர் குவியத் தொடங்கியுள்ளனர்.

error: Content is protected !!