News September 8, 2025
நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?

நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்ததாக காட்டுத் தீ போல் செய்தி பரவியது. அவரது உடல்நிலை குறித்து ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் கவலை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த செய்தி வெறும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. பாதுகாப்பாகவும், ஆரோக்கியமுடனும் இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சிலமணி நேரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் விளம்பர பதிவை காஜல் பகிர்ந்துள்ளார்.
Similar News
News September 9, 2025
ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் UAE-ல் இன்று தொடங்குகிறது. தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்று குரூப் B-ல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் – ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. ஹாங் காங்குடன் ஒப்பிடுகையில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஆப்கானிஸ்தான் வலுவாக உள்ளது. எனினும் ஹாங் காங் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
News September 9, 2025
டாலருக்கு எதிராக ₹ சரிவு: FM விளக்கம்

டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் உலக சூழல் என FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக பெரிதும் சரிந்து வந்தாலும், வேறெந்த நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை என்றும் அவர் கூறினார். இந்தியா மட்டுமல்ல பிறநாடுகளின் நாணயங்களுக்கும் டாலர் விஷயத்தில் அதே நிலை ஏற்படுவதாக FM குறிப்பிட்டார்.
News September 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க