News March 4, 2025
பெண்ணை கட்டிப் பிடித்தாரா ஆ.ராசா? FACT CHECK

பொதுவெளியில் ஒரு பெண்ணை திமுக எம்.பி. ஆ. ராசா கட்டிப்பிடிப்பதை போன்ற ஒரு புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி விமர்சனத்தை எழுப்பி வந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து FACTCHECK குழு நடத்திய சோதனையில் அது ஜோடிக்கப்பட்ட புகைப்படம் எனத் தெரியவந்துள்ளது. NCP MP சுப்ரியா சுலேவும், ஆதித்யா தாக்கரேவும் இருக்கும் ஃபோட்டோவை மார்ஃபிங் செய்து இந்த போலி புகைப்படத்தை சிலர் உருவாக்கியுள்ளனர்.
Similar News
News January 3, 2026
பொங்கல் பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பொங்கல் விடுமுறைக்கு சிரமமின்றி சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் – தாம்பரம் ரயில் ஜன.11, 18, குமரி – தாம்பரம் – நாகர்கோவில் ரயில் ஜன.13, 20, செங்கல்பட்டு – நெல்லை ரயில் ஜன.9, 16 தேதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் Railone ஆப் (அ) <
News January 3, 2026
காங்., நடுத்தெருவில் நிற்கும்: அண்ணாமலை

காங்., 2026-ல் தேர்தல் நடக்கும்போது நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். அதற்கான வேலைகளைத் தான் தற்போது செய்கிறார்கள் என்ற அவர், காங்கிரஸார் குதிரை பேரம் பேசுகிறார்கள், ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள் என்றார். மேலும், இந்த பஞ்சாயத்தை சரி செய்யவே வாரம் வாரம் TN-க்கு வரும் மேலிட பொறுப்பாளர்களுக்கு டிக்கெட் போட்டே காங்., கஜானா காலியாகிவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.
News January 3, 2026
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹5000

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ₹5000 நிதி, ₹2 லட்சம் மதிப்பிலான காப்பீடு ஆகியவற்றை இ-ஷ்ரம் திட்டம் வழங்குகிறது. நிரந்தர வேலை, ஓய்வூதிய வசதி இல்லாதவர்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். இதனை பெற 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கணும். இந்த கார்டை பெற eshram.gov.in -ல் விண்ணப்பியுங்கள். SHARE.


