News April 11, 2025
பத்ம விருது பெற்றவர்களை அவமதித்தாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றவர்களை கூட பல மணி நேரம் காக்க வைப்பார் என பிரபல பாடகர் அபிஜீத் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். ரஹ்மான் இசையமைத்த ‘தில் ஹி தில் மெய்ன்’ படத்திற்கு பாடல் பாட சென்ற போது இதை நான் நேரடியாக பார்த்ததாகவும் கூறியுள்ளார். தானும் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், கடைசி வரை ரஹ்மானை பார்க்கவில்லை எனவும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 5, 2025
வார்னர் பிரதர்ஸை வாங்குகிறதா Netflix?

உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸை விற்பதற்கான ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், Netflix நிறுவனம் அதிக தொகையை செலுத்தி முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் மட்டும் முடிந்தால், இனி Netflix-லேயே HBO மேக்ஸ், DC காமிக்ஸின் படங்கள், தொடர்களை பார்க்கலாம். இதனிடையே, ஏல நடைமுறை நியாயமானதாக இல்லை என Paramount நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
News December 5, 2025
இந்தாண்டில் மக்கள் கூகுளில் அதிகம் தேடியவை (PHOTOS)

கூகுள், 2025-ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், IPL முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, வேறு எவையெல்லாம் அதிகம் தேடப்பட்டுள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கூகுளில், நீங்கள் அதிகம் தேடியது எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE பண்ணுங்க.
News December 5, 2025
ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெறவுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சிறப்பு தரிசன டிக்கெட்களுக்கான (₹300) முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படும். டிக்கெட்களை பெற <


