News March 16, 2024
சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்

2024 மக்களவைத் தேர்தலை ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்கும் இறுதி வாய்ப்பாக மக்கள் கருத வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் மூலம் இந்தியாவின் நியாயத்திற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட கிடைத்த கடைசி வாய்ப்பாக இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 22, 2025
BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி

கரூர் துயர சம்பவத்திற்கு பின், விஜய் X-ல் 1 பதிவு, 1 வீடியோ, 1 அறிக்கை மட்டுமே வெளியிட்டார். நிவாரணத் தொகை கூட வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டது. அவரது இந்த அமைதியான நிலைப்பாடு, தவெக நிர்வாகிகளை அதிருப்தியடைய செய்திருக்கிறதாம். இது 2-ம் கட்ட தலைவர்கள் மூலம் விஜய் காதுக்கு சென்றதால் அதிர்ச்சியடைந்த அவர், கட்சிப் பணிகளில் மீண்டும் வேகம் காட்ட முடிவெடுத்துள்ளார். சீக்கிரம் களத்துக்கு வருவாரா விஜய்?
News October 22, 2025
தமிழ்நாட்டில் பேய்கள் நடமாட்டம் உள்ள இடங்கள்

தமிழ்நாட்டில் பேய்கள் மற்றும் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதாக கூறப்படும் சில இடங்களின் போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஸ்வைப் செய்து பாருங்கள். அதேபோல, உங்களுக்கு தெரிந்த பேய் நடமாட்டங்கள் உள்ள இடங்கள் குறித்து கமெண்ட்டில் பதிவிடுங்கள். பேய் / அமானுஷ்ய சக்திகள் உள்ளதாக நீங்கள் நம்புகிறீர்களா?
News October 22, 2025
ரெட்ரோ காரை விற்பனைக்கு கொண்டு வரும் டாடா

1990-ல் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த Tata Sierra கார் மாடலை, அந்நிறுவனம் அடுத்த மாதம் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. பழைய ரெட்ரோ ஸ்டைலை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்து அறிமுகப்படுத்த உள்ளது. முதலில் எரிபொருளில் இயங்கும் மாடலையும், அடுத்ததாக EV மாடலையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டாடா நிறுவனத்தின் முதல் 3 ஸ்கிரீன் கொண்ட காராகவும் இது இருக்கும்.