News March 11, 2025

நீரழிவு நோய்க்கான மாத்திரை விலை 90% குறைகிறது

image

நீரழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மாத்திரையின் விலை 90% குறைக்கிறது. அதாவது ₹60க்கு விற்கப்படும் ஒரு மாத்திரையின் விலை வெறும் ₹6ஆக குறைகிறது. கோடிக்கணக்கான மக்களின் செலவை குறைத்து நிதி அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் என்பதுடன் நீரிழிவு நோய் பாதித்த அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்த ஏதுவாக அமையும்.

Similar News

News March 11, 2025

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மொட்டை அடித்த போலீஸ்

image

ம.பி.யின் தேவாஸில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக போலீஸ் அழைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CT கோப்பையை இந்தியா வென்றதை பட்டாசு வெடித்து இளைஞர்கள் அபாயகரமான முறையில் கொண்டாடினர். அதை தடுத்த போலீசிடம் சிலர் தகாத முறையில் நடந்த வீடியோ பதிவை வைத்து, 9 பேரை பிடித்து, மொட்டை அடித்து முக்கிய வீதிகள் வழியே அழைத்து சென்றதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

News March 11, 2025

ஆபாசத் திருடன்… எதை திருடியிருக்கான் பாருங்க

image

கர்நாடகாவில் ஆபாசப் படங்களுக்கு அடிமையான இளைஞர், பெண்களின் உள்ளாடைகளை திருடிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தும்குரு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் சரத், அதிகமாக ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்டவராம். அவரது வீட்டின் அருகே வசிக்கும் பெண்கள் கொடியில் காயப்போடும் உள்ளாடைகளை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்பெண்களின் புகாரையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 11, 2025

திமுகவை நம்ப இது 1960 அல்ல: அண்ணாமலை

image

திமுகவின் 60 ஆண்டு கால பொய் பித்தலாட்டங்களை தமிழக மக்கள் புரிந்து கொண்டுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து முதல்வர் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாகவும், திமுகவின் போலி நாடகத்தை நம்ப இது 1960கள் அல்ல எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதை தடுக்க முடியாது என்றும் சவால் விடுத்துள்ளார்.

error: Content is protected !!