News November 8, 2025
Diabetes இருந்தால் இனி USA-க்கு விசா கிடையாது!

அமெரிக்காவில் ஏற்கெனவே விசா கிடைப்பதில் பல பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில், கிரீன் கார்டு பெற அல்லது விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, Diabetes, இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் இருந்தால், அவர்களுக்கு விசா மறுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயுள்ளவர்களால் அமெரிக்க அரசுக்கு நிதிச்சுமை கூடும் எனக்கருதி, டிரம்பின் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 8, 2025
இந்திய நிறுவனம் மீது தடை விதித்தது உலக வங்கி

இந்தியாவின் முன்னணி மின்மாற்றி உற்பத்தி நிறுவனமான TARIL India மீது, உலக வங்கி தடை விதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கியின் நிதியுதவி பெறும் எந்த திட்டத்திலும் 2029-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
PAK-AFG சமாதான பேச்சுவார்த்தை நிறுத்தம்

PAK-AFG இடையே மோதல் நீடித்து வந்தாலும், மறுபுறும் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்கன் வாய்மொழி உத்தரவாதங்களை மட்டுமே அளிக்க விரும்புவதாக கூறிய ஆசிப், 4-வது சுற்று பேச்சுவார்த்தைக்கான எந்தத் திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
News November 8, 2025
சற்றுமுன்: சின்னத்திரை நடிகர் காலமானார்

‘உப்பு புளி காரம்’ என்ற வெப் சீரிஸில் நடித்த சின்னத்திரை நடிகர் பேரரசு(21) சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். நடிகரும் உதவி இயக்குநருமான அவர், தனது சொந்த ஊரான பண்ருட்டி அருகே பைக்கில் சென்றபோது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த பேரரசு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மரணம் கிராமத்தினரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. RIP


