News April 14, 2025
தொடரும் தோனியின் சாதனை… விக்கெட் கீப்பிங் தல தலதான்

தோனி இறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் எதாவது ஒரு சாதனை அரங்கேற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. பேட்டிங்கில் தோனி சொதப்பினாலும் விக்கெட் கீப்பிங்கில் இன்றும் கிங்குதான். LSG-க்கு எதிரான ஆட்டத்தில் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்ததன் மூலம் விக்கெட் கீப்பராக 200 டிஸ்மிஷல்களை செய்த முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். அதாவது IPL-லில் மட்டும் தோனி 154 கேட்ச்களையும், 46 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார்.
Similar News
News April 16, 2025
10 நிமிடத்தில் வீட்டிற்கே வரும் சிம் கார்டு

சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்வதற்காக, டெலிவரி பார்ட்னராக பிளிங்கிட்டை ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. சிம் டெலிவரி சேவை, சென்னை, ஐதராபாத், புனே, மும்பை உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் கிடைக்கும். சிம் கார்டு டெலிவரி செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின்படி, ஆதார் அடிப்படையிலான KYC அங்கீகாரத்தைப் பயன்படுத்தி எண்ணை செயல்படுத்தலாம்.
News April 16, 2025
காலை 7 மணி வரை மழை

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வெயிலும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
வரலாற்றில் இன்றைய தினம்

> அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது (1862)
> ஜாலியன் வாலா பாக் படுகொலையை கண்டித்து காந்தி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார் (1919)
> கியூபாவை ஒரு பொதுவுடைமை நாடு என்று பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார் (1961)
> முதலாவது உலக தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது (1966)