News March 13, 2025
தோனியின் க்ரேஸ்… தொடரும் CSKவின் ரெக்கார்ட் லிஸ்ட்!

இன்ஸ்டாவில் 17 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்ற முதல் IPL அணி எனும் பெருமையை CSK பெற்றுள்ளது. இந்த க்ரேஸுக்கு முக்கிய காரணம், தோனி என்ற சகாப்தம் அணியில் இருப்பதுதான். அவரை, தொடர்ந்து விளையாட வைக்கவே இந்த ஆண்டின் IPL விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் சென்னை அணியின் மவுசு கூடுகிறதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. வரும் 23 ஆம் தேதி CSK தனது முதல் போட்டியில் MI அணியை எதிர்கொள்கிறது.
Similar News
News March 13, 2025
பட்ஜெட்டில் ₹-க்கு பதில் ‘ரூ’

2025-26 பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதற்கான இலச்சினையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய ரூபாய் குறியீட்டிற்கு (₹), பதிலாக ரூ இலச்சினை பயன்படுத்தியுள்ளார். கடந்த பட்ஜெட்டில் ₹ பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மொழி சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், ₹ என்ற குறியீட்டை தவிர்த்து, தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப் படுத்தி உள்ளார்.
News March 13, 2025
நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை(மார்ச் 14) திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 6.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், தொகுதியில் கள நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News March 13, 2025
சீமானின் உதவியாளர், பாதுகாவலருக்கு ஜாமின்!

சீமானின் உதவியாளர் சுபாகர், பாதுகாவலர் அமல்ராஜூக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், இருவர் மீதும் இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.