News April 11, 2024

தோனியின் முன்னாள் பிசினஸ் பார்ட்னர் கைது!

image

தோனியின் முன்னாள் பிசினஸ் பார்ட்னரான மிஹிர் திவாகர் ஜெய்ப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவன இயக்குநராக இருக்கும் இவர், நாட்டில் பல இடங்களில் கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார். அதில் தனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தோனி தொடர்ந்த வழக்கில் மிஹிர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய சௌமியா தாஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News November 13, 2025

முடிவுக்கு வருகிறது அமெரிக்க அரசின் முடக்கம்

image

USA-வில் காப்பீட்டு திட்டத்தின் மானியங்களை விடுவிப்பது தொடர்பான மோதலில் அரசுக்கான நிதி விடுவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அரசு முடங்கியது. இந்நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை, அந்நாட்டின் மிக நீண்ட அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நிதி மசோதா மீது வாக்களிப்பை தொடங்கியது. ஜனநாயக கட்சி எதிர்த்தாலும், குடியரசு கட்சி 213-209 என்ற வாக்குகளில் மசோதாவை இறுதி வாக்கெடுப்புக்கு நகர்த்தியுள்ளது.

News November 13, 2025

அஜித்குமார் வழக்கு: ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

image

போலீஸ் விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் வழக்கில், கைதான தனிப்படை காவலர்கள் பிரபு, ஆனந்த், ராஜா ஆகியோர் ஜாமீன் கேட்டு மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 3 பேருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து சிபிஐ தரப்பில் மனு செய்யப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை நவ.19-க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News November 13, 2025

தேவநாதனை கைது செய்ய தீவிரம்

image

நிதி நிறுவனம் நடத்தி ₹500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில், அரசியல் தலைவரும், பாஜக ஆதரவாளருமான தேவநாதன் யாதவ் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால், ஜாமீன் நிபந்தனைப்படி ₹100 கோடி வைப்புத்தொகை செலுத்தாததால், அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று நேற்று கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அவரை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!