News April 9, 2025
தொடரும் தோனியின் சாதனை

பேட்டிங்கில் தோனி சற்று சறுக்கினாலும் அவரது விக்கெட் கீப்பிங் இன்றும் தலைசிறந்ததாகவே உள்ளது. அவரின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கிற்கு அருகே கூட இளம் வீரர்களால் வர முடியாது. நேற்றைய ஆட்டத்தில் நேகல் வாதேராவின் கேட்சை பிடித்ததன் மூலம் IPL வரலாற்றில் 150 கேட்சுகளை பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு அடுத்த இடத்தில் 137 கேட்சுகளுடன் தினேஷ் கார்த்திக் உள்ளார்.
Similar News
News April 17, 2025
பிரித்விராஜுக்கு விருது… கைகொடுத்த ‘ஆடுஜீவிதம்’..

தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தி வருபவர் பிரித்விராஜ். அவர் இயக்கிய
‘எம்புரான்’ படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வசூலை வாரிக்குவித்தது. இதனிடையே ‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக கேரள அரசின் சிறந்த நடிகர் விருது பிரித்விராஜுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் சிறந்த கதைக்கான விருது ‘காதல் தி கோர்’ படத்துக்கும், சிறந்த படத்துக்கான விருது ‘ஆட்டம்’ படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
News April 17, 2025
KTK மூத்த வக்கீல் காலமானார்.. காவிரி வழக்கில் வாதாடியவர்

பிரபல கர்நாடக (KTK ) மூத்த வழக்கறிஞர் ஷரத் ஜாவலி (84) காலமானார். ஹாவேரியை சேர்ந்த அவர், பஞ்சாப் EX ஆளுநர் டி.சி. பாவேட்டின் கொள்ளு பேரன். கர்நாடகாவுக்காக 60 ஆண்டுகள், உச்சநீதிமன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார். அதில் கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இடையேயான காவிரி, கிருஷ்ணா நதிநீர் போன்ற பல்வேறு நதிநீர் விவகார வழக்குகளும் அடங்கும். அவரின் தந்தை ஜாவலியும் வழக்கறிஞர்தான்.
News April 17, 2025
SEBI வைத்த செக்.. கம்பெனியை இழுத்து மூடிய BluSmart?

ஜென்சால் நிறுவன நிதிகளை மோசடியாக பயன்படுத்தியதால், அதன் இணை நிறுவனர்களின் கம்பெனியான ப்ளூ ஸ்மார்ட் செயல்பட SEBI இடைக்கால தடைவிதித்துள்ளது. இதனால் EV சவாரி நிறுவனமான ப்ளூ ஸ்மார்ட் தனது சேவையை நிறுத்தியுள்ளது. முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், 90 நாள்களுக்குள் சேவை மீண்டும் தொடங்காவிட்டால், பயனர்களின் வாலட் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.