News May 2, 2024

சர்ச்சையாகும் தோனியின் செயல்

image

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரை சென்னை அணியின் தோனி எதிர்கொண்டார். அதில் 3ஆவது பந்தினை தோனி தூக்கி அடிக்க, எதிர் முனையில் இருந்து மிட்செல், ரன் எடுக்க ஓடிவந்தார். ஆனால், அவரை தோனி திருப்பி அனுப்பினார். ரன் குவிக்கும் நோக்கோடு தோனி திருப்பி அனுப்பியிருந்தாலும் மிட்செல் முன்னணி பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் இந்த செயல் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.

Similar News

News March 21, 2026

RCB-க்கு இன்னொரு கோப்பை உறுதி: அஸ்வின்

image

நடப்பு சாம்பியனான RCB அணி தங்களுடைய காம்பினேஷனில் உள்ள போதாமைகளை சரிசெய்த விதம் மிக சிறப்பாக உள்ளது என அஸ்வின் பாராட்டியுள்ளார். IPL தொடரை வெல்வது அவ்வளவு எளிதல்ல; ஆனால், டீம் காம்பினேஷனும் பொருத்தமான மாற்று வீரர்களும் RCB-க்கு பலம்கூட்டுகிறார்கள் என கூறியுள்ளார். இந்த அணியை வைத்து RCB அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் ஒரு கோப்பையை வெல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News March 21, 2026

வேளச்சேரி தொகுதியில் திருமா போட்டியா?

image

விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் தலைமை அலுவலகத்தில் ₹5,000 செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என திருமாவளவன் அறிவித்துள்ளார். வேளச்சேரி தொகுதியில் திருமாவளவன் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் MLA S.S.பாலாஜி மீண்டும் அதே தொகுதியில் களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. மேலும், வன்னி அரசு, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு, கெளதம் சன்னாவும் போட்டியிட வாய்ப்புள்ளதாம்.

News March 21, 2026

நடிகை கிரணை படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. கொடுமை

image

நண்பர்களே தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை கிரண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பண நெருக்கடி ஏற்பட்டதால் நண்பர்களிடம் உதவி கேட்டதாகவும், அதற்கு அவர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்தது மிகவும் வலியை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகே, பணம் சம்பாதிக்க கிளாமர் படங்களை அதிகளவில் SM-ல் பதிவிட ஆரம்பித்ததாகவும் கிரண் கூறியுள்ளார்.

error: Content is protected !!