News March 23, 2024
சில போட்டிகளில் தோனி விளையாடமாட்டார்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் நேற்று களமிறங்கிய சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி, இனி வரும் போட்டிகளில் சில போட்டிகளில் விளையாடாமல் போக வாய்ப்புள்ளதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இந்த சீசனில் தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாட மாட்டார். இடையே சிறிய ஓய்வு எடுக்கலாம். அதனால் தான் ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தோனி சிறப்பாக விளையாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
Similar News
News April 28, 2025
இபிஎஸ்-க்கு அரசியல் வீழ்ச்சி கவுண்ட்டவுன் ஸ்டார்ட்

அமைச்சரவை மாற்றம் குறித்து விமர்சித்த இபிஎஸ்-க்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். குடும்பத்திற்காக கூட்டணி வைத்த இபிஎஸ்ஸின் அரசியல் வீழ்ச்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது எனக் கூறிய அவர், இபிஎஸ் ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும், தோல்வியில் சாதனை படைக்கும் ‘தோல்விசாமி’, அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு செல்வதாகவும் விமர்சித்துள்ளார்.
News April 28, 2025
மூன்று நாள்கள் போர் நிறுத்தம்

உக்ரைன் மீதான போர் 3 நாள்கள் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். மே 8 முதல் மே 10 வரை போர்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மே 9-ம் தேதி இரண்டாம் உலகப்போரின் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெறவிருப்பதால், புடின் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மேலும், இந்த போர்நிறுத்தம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News April 28, 2025
பொள்ளாச்சி வழக்கில் விரைவில் தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். 2019-ம் ஆண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில் தொடங்கிய விசாரணை, பூதாகரமாகி நாட்டையே உலுக்கியது. 9 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியது, பின்னர் CBI விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்திருக்கும் நிலையில் மே 13-ம் தேதி தீர்ப்பு வருகிறது.