News May 21, 2024
ட்விட்டரை விரும்பாத தோனி

ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் பயன்படுத்தவே அதிகம் விரும்புவதாக CSK வீரர் தோனி கூறியுள்ளார். துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ட்விட்டரில் எந்தவொரு நல்ல விஷயமும் நடந்தது கிடையாது என்றும், ட்விட்டரில் ஏதாவது பதிவிட்டால் அதை பல வகையில் திரித்து சர்ச்சையாக்கி விடுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், இன்ஸ்டாவில் ஏதாவது ஒரு வீடியோவை பதிவிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
Similar News
News February 20, 2026
ராமதாஸுக்கு பின்னடைவு

மாம்பழ சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை HC தள்ளுபடி செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு HC-யிலும் வழக்கு தாக்கல் செய்வதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
News February 20, 2026
ஆஹா… அடோப்பின் அனைத்து சாப்ட்வேர்களும் இனி இலவசம்!

இந்திய மாணவர்களுக்கு Adobe நிறுவனம் போட்டோஷாப் முதல் 20-க்கும் மேற்பட்ட கிரியேட்டிவ் கிளவுட் சாப்ட்வேர்களை இலவசமாக வழங்கப்போவதாக டெல்லி AI மாநாட்டில் அறிவித்துள்ளது. இந்திய அரசுடன் இணைந்து, இந்த சாப்ட்வேர்ஸ் நாடு முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு கிடைக்கும். NASSCOM Futureskills Prime உடன் இணைந்து ‘AI-first learning’ சான்றிதழ்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
News February 20, 2026
மார்ச் 1-ம் தேதி இதை கட்டாயம் செய்யுங்கள்: விஜய்

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி ஒவ்வொரு தொகுதியிலும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தை கட்டாயமாக நடத்த வேண்டும் என தவெக மா.செக்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பணிகள் குறித்து அனைத்து நிர்வாகிகளுக்கும் தெளிவாக விளக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 5 தேர்தல் பணிமனைகள் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


