News April 6, 2025
தோனி ஓய்வில்லை.. பிளெமிங் உறுதி

தோனி தற்போதைக்கு ஓய்வில்லை என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். தோனியின் பெற்றோர் சிஎஸ்கே இன்று விளையாடும் போட்டியை காண சென்னை மைதானத்திற்கு வந்தனர். இதை வைத்து அவர் இன்று ஓய்வு பெறக்கூடும் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிளெமிங், அந்தத் தகவலில் உண்மையில்லை என்றும், தோனி இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News December 1, 2025
நெல்கொள்முதல் விவகாரம்: திமுக நோட்டீஸ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத உயர்வு, 100 நாள் வேலை திட்ட நிதி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் SIR குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
News December 1, 2025
திருமாவுக்கு சீக்ரெட் அசைன்மெண்ட்: வானதி சாடல்

செங்கோட்டையனை பாஜக இயக்குவதாக கூறும் திருமாவுக்கு வானதி சீனிவாசன் கவுண்ட்டர் அட்டாக் கொடுத்துள்ளார். NDA கூட்டணியில் குழப்பம் விளைவிக்க வேண்டும், மக்கள் மத்தியில் தங்களை பலவீனமாக காட்டவேண்டும் என்றே திருமா அப்படி பேசுவதாக கூறிய அவர், இது அவருக்கு வழங்கப்பட்ட அசைன்மெண்ட் என கூறியுள்ளார். மேலும், மக்களிடம் அதிக வாக்குகள் வாங்கி, ஆட்சி அமைப்பது மட்டுமே எங்களுடைய அசைன்மெண்ட் என தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
BREAKING: விபத்தில் அதிமுக முக்கிய தலைவர் மரணம்

அதிமுக மூத்த தலைவர் வி.சி.ராமையா சாலை விபத்தில் உயிரிழந்தார். 2012-ல் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் பொருளாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். வாண்டாகோட்டை அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான ராமையாவின் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


