News August 19, 2024
தோனி என் அண்ணன் அல்ல: கலீல் அஹமத்

தோனி தனது அண்ணனும் அல்ல, நண்பனும் அல்ல. அவர் தனது குரு என இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமத் தெரிவித்துள்ளார். ஜாஹிர் கானைப் பார்த்து முதல் ஓவர் வீசும் பவுலராக ஆக வேண்டும் என சிறுவயதில் நினைத்ததாகவும், தான் அறிமுகமான ஆசிய கோப்பை தொடரில் AFG-க்கு எதிரான போட்டியில் தன்னை நம்பி முதல் ஓவர் வீச தோனி சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவருடைய நம்பிக்கையை பெற்றது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
BREAKING: தமிழகத்தில் பஸ் விபத்து.. 6 பேர் மரணம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை தென்காசி அரசு ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது, வழியிலேயே 6 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஹாஸ்பிடலில் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
News November 24, 2025
₹20 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் காதல் வாட்ச்!

1912-ல் டைட்டானிக் கப்பலில் பலியான தொழிலதிபர் இசிடோர் ஸ்ட்ராஸ்க்கு சொந்தமான தங்க பாக்கெட் வாட்ச், ஏலத்தில் சுமார் ₹20 கோடிக்கு விற்று சாதனை படைத்துள்ளது. கப்பல் மூழ்கும் போது, ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி ஐடா ஒருவரையொருவர் பிரிய மறுத்து உயிரிழந்த காதல் ஜோடி. அவர்களது காதல் சின்னமாக விளங்கிய இந்த வாட்ச், தற்போது டைட்டானிக் நினைவு பொருள்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
News November 24, 2025
தற்குறி Vs ஆச்சரியக்குறி: அமைச்சர் ரகுபதி புது விளக்கம்

தவெக தொண்டர்கள் <<18366063>>தற்குறி<<>> அல்ல, ஆச்சரியக்குறி என விஜய் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரகுபதி, விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் இலக்கு தேர்தல் குறிதான் என்றும் அவர் கூறியுள்ளார். யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என்றும், யாரோடும் எங்களுக்கு பகை இல்லை எனவும் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.


