News April 25, 2025
இன்று தோனி நிகழ்த்தபோகும் மாபெரும் ரெக்கார்ட்!

CSK-ன் கேப்டன் தோனி, T20 கிரிக்கெட்டில் இன்று தனது 400-வது மேட்ச்சில் விளையாட இருக்கிறார். இதன் மூலம், இந்த சாதனையை செய்யும் 4-வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். இப்பட்டியலில், ரோஹித் சர்மா (456), தினேஷ் கார்த்திக் (412) விராட் கோலி (407) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். இன்று தோனி CSK-வுக்கு வெற்றியை தேடிக் கொடுப்பாரா?
Similar News
News December 1, 2025
விஜய் ஆடியோ லான்ச்சில் பங்கேற்கும் பிரபலங்கள்

‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ லான்ச் இம்மாத இறுதியில் மலேசியாவில் நடைபெற உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால், அவரின் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆடியோ லான்ச்சில் விஜய்க்கு நெருக்கமான இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூவரும் ஜனநாயகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
News December 1, 2025
பள்ளிகள் விடுமுறை… வந்தது அப்டேட்

பள்ளி மாணவர்களுக்கு கொத்தாக விடுமுறையுடன் டிசம்பர் மாதம் பிறந்திருக்கிறது. அரையாண்டு விடுமுறை டிச.24-ல் தொடங்குவதால், இம்மாதத்தில் தொடர்ந்து 8 நாள்கள் லீவு தான். வார விடுமுறையுடன் சேர்த்து இம்மாதம் மட்டும் 14 நாள்கள் பள்ளிகள் செயல்படாது. அதுமட்டுமின்றி, மழை காரணமாகவும் அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
News December 1, 2025
தெளிவான முடிவை எடுத்துள்ளேன்: KAS

பாஜக சொல்லியே தவெகவில் இணைந்திருப்பதாக <<18435219>>உதயநிதி விமர்சித்ததற்கு<<>> செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். யார் சொல்லியும் இணையவில்லை, நானே தெளிவாக முடிவெடித்து தவெகவில் இணைந்திருக்கிறேன் எனக் குறிப்பிட்ட அவர், தனது பயணங்கள் சரியாகத்தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதாகவும் அவர் சாடியுள்ளார்.


