News September 1, 2025
ஆல் ஏரியாலயும் தோனி கில்லி.. PHOTO

6 மாதம் விவசாயி, 3 மாதம் கிரிக்கெட் வீரர் என்பதே தோனியின் இலக்கணமாக அவரது ரசிகர்கள் கூறுவது. அதற்கேற்றார்போல் தான் அவரது செயல்பாடும் இருக்கும். அந்த வகையில் தோனி கோல்ஃப் விளையாடும் போட்டோ வைரலாகிறது. ‘எப்பவுமே என் தலைவன் எனர்ஜிட்டிக்கா இருப்பாப்ல’ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் அவரை Mentor ஆக நியமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Similar News
News September 1, 2025
கூட்டணியை உறுதி செய்கிறார் ஓபிஎஸ்..

OPS மாநாடு தள்ளிவைப்பு குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. பாஜக கண்டுக்கவே இல்லை, EPS-ம் புறக்கணிக்கிறார். இதனால், வலுவான கூட்டணியை அமைந்தபிறகு மாநாட்டை நடத்தலாம் என ஆதரவாளர்கள் கூறியதால் OPS இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் OPS தரப்பு 10 சீட்கள் வரை கேட்பதாகவும், கூட்டணி உறுதியான பின் மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
News September 1, 2025
பிசினஸில் வெற்றி பெற 7 டிப்ஸ்!

வாழ்க்கையில் முன்னேற வெற்றியாளர்கள் கூறும் டிப்ஸ். *சிறியதாய் தொடங்கி பெரியதாய் கட்டமையுங்கள். *முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அதை முதலில் செய்யுங்கள். *ஒரு நாளைக்கு 3 நல்ல முடிவுகளை எடுங்கள். *முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க மறந்துவிடாதீர்கள். *இரவில் நல்ல ஓய்வு எடுங்கள். *எப்போதும் உங்களுடைய பலத்தை முழுமையாக நம்புங்கள். *கஸ்டமர்கள், ஊழியர்களுடன் நல்லுறவை உருவாக்குங்கள்.
News September 1, 2025
மெகா கூட்டணிக்கான ப்ளானில் EPS.. விரைவில் அறிவிப்பு?

அதிமுக கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் இம்மாதம் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்த EPS திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்ட விருந்து கொடுக்கும் ப்ளானில் உள்ள EPS, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளையும் அங்கு அழைத்து, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தனித்தனி டீம் அமைத்துள்ளாராம். உருவாகுமா மெகா கூட்டணி?