News March 24, 2024

மஞ்சுமெல் பாய்ஸ் படம் பார்த்த தோனி

image

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை சென்னை திரையங்கில் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் கண்டு களித்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் துவக்கப் போட்டியில் ஆர்சிபி அணியை சிஎஸ்கே வென்றது. இப்போட்டிக்கு பிறகு, நேற்று பயிற்சியின் இடையே தோனி உள்ளிட்டோர் சத்யம் திரையரங்கம் சென்று மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்தனர். தோனி வந்திருப்பதை பார்த்த ரசிகர்கள், தல என கோஷமிட்டபடி இருந்தனர்.

Similar News

News February 9, 2026

பிப்ரவரி 17-ல் ‘நெருப்பு வளைய’ சூரிய கிரகணம்!

image

2026-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் பிப்ரவரி 17-ல் நிகழவுள்ளது. அன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணம், ‘நெருப்பு வளைய’ கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நேராகக் கடந்து செல்லும்போது இந்த கிரகணம் நிகழ்கிறது. மதியம் 3.26 மணி முதல் மாலை 7.57 மணி வரை நீடிக்கும் இந்த வானியல் நிகழ்வு முக்கியமாக அண்டார்டிகாவில் தெரியும். இந்தியாவில் இதனை காண முடியாது.

News February 9, 2026

9 நாள்கள் நடந்த தமிழக தேர்தல்.. எப்போது தெரியுமா?

image

17-வது சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இதுவரை நடந்த 16 பேரவைத் தேர்தல்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடைபெற்றன, எத்தனை கட்டங்களாக நடைபெற்றன என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப் பக்கமாக ஸ்வைப் செய்து அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் எந்த தேர்தலில் உங்கள் முதல் வாக்கை செலுத்துனீர்கள், அப்போது யார் ஆட்சி அமைத்தது என்று கமெண்ட் பண்ணுங்க.

News February 9, 2026

அண்ணாமலை விலகல்.. தமிழக பாஜகவில் பரபரப்பு

image

பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியது, தமிழக பாஜகவில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை கமலாலயத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷ் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!