News March 18, 2024
தருமபுரி: திமுக சார்பில் யார்..?

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, தருமபுரியில் களங்மிரங்குவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.செந்தில்குமார் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Similar News
News October 22, 2025
தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாளை 23.10.2025 (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக (நவ.15)சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து விடுத்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
ஏ.ஜெட்டி அள்ளி: உழவர் சந்தையின் விலை!

ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சி உழவர் சந்தையில் இன்றைய (அக்.22) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 1-கிலோ தக்காளி ரூ.18, கத்தரிக்காய் ரூ.20, வெண்டைக்காய் ரூ.15, அவரைக்காய் ரூ.35, முருங்கைக்காய் ரூ.100,பச்சை மிளகாய் ரூ.35, புடலங்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.26, தேங்காய் ரூ.95, குடைமிளகாய் ரூ.72, சின்னவெங்காயம் ரூ.35, மற்றும் சேனைக்கிழங்கு ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது.
News October 22, 2025
மழைக்கால மின் பயன்பாட்டு விதிமுறைகள் வெளியீடு

மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் பருவமழை காலங்களில் பின்வருவனவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தல். ஈரமான கைகளால் ஸ்விட்ச் களை பயன்படுத்த கூடாது. மின் கம்பம் அருகே மழை நீர் தேங்கி இருந்தால் அருகே செல்ல தவிர்க்கவும். மின் கம்பிகளில் ஆடைகள் உலர்த்துவது, மின்கம்பிகளில் கால்நடைகளை கட்டுவது போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தல். மின் சம்பந்தமான புகார்களுக்கு 94987 94987 அழைக்கவும்.