News March 16, 2024
தருமபுரி: வனத்துறை முக்கிய அறிவிப்பு

கோடை காலம் தொடங்கிவிட்டதால், தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி வன சரக்கத்திற்கு உட்பட்ட பகுதி வறண்டு காணப்படுகிறது. எனவே வன சாலைகளை பயன்படுத்துவோர் தீப்பற்ற கூடிய பொருட்கள் மற்றும் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். மேலும் காட்டிற்குள் தீ வைக்கும் நபர்களை வனத்துறையில் பிடித்துக் கொடுத்தாலோ அல்லது தகவல் கொடுத்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
இன்று தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தருமபுரி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஆக.8) காலை 11:00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் தலைமை தாங்கி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைப்பார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
News August 7, 2025
தர்மபுரி: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

தர்மபுரி மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
News August 7, 2025
மினி சரக்கு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வையாபுரி (வயது.37) இவர் இன்று உறவினர் வீட்டுக்கு செல்ல மொபெட் வாகனத்தில் பாப்பாரப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். தொட்லாம்பட்டி பெருமாள் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் மோதியதில் வையாபுரி தலை நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.