News June 21, 2024
தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு

மகாவிஷ்ணுவின் அவதாரமாக தன்வந்திரி பகவானை விஷ்ணுதர்மோத்தர புராணம் போற்றுகிறது. அத்தகைய தன்வந்திரி பெருமாளை செவ்வாய்க்கிழமை தோறும் பாலபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாற்றி, சுக்குப்பொடியுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து நிவேதனம் செய்து, இலுப்ப எண்ணெய் தீபமேற்றி, 12 முறை வலம் வந்து, ஸ்ரீதன்வந்திரி பகவான் மந்திரத்தை 21 முறை பாடி வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
Similar News
News September 15, 2025
இட்லிக்கு ஏங்கினாரா தனுஷ்? உண்மை என்ன?

இட்லி சாப்பிடுவதே சிறுவயதில் தனக்கு பெருங்கனவு என்று <<17712349>>தனுஷ் கூறியிருந்தார்<<>>. ஆனால், ஒரு இயக்குநரின் மகனுக்கு இந்த நிலையா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதற்கான பதில், சென்னை வந்த தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, மில்லில் வேலை பார்த்துள்ளார். அப்போது, ₹1-ஐ மிச்சப்படுத்த தினமும் 7 கி.மீ., நடந்து போயுள்ளார். விசுவிடம் கஸ்தூரி உதவி இயக்குநராக இருந்தபோதும் சிறிய வீட்டிலேயே இருந்தனராம்.
News September 15, 2025
₹3,000 கோடி.. மகளிருக்கு நாளை மகிழ்ச்சியான அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 இன்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக, தமிழகம் முழுவதுமுள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நாளை(செப்.16) ₹3,000 கோடி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கடனுதவி திட்டத்தை சேலம் கருப்பூரில் DCM உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இதன்மூலம், தமிழகம் முழுவதும் 2.55 கோடி பெண்கள் பயன்பெறுவர். SHARE IT.
News September 15, 2025
எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்: பிரேமலதா

திரையுலகில் இருந்து வந்த விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடுவது இயல்பான ஒன்றுதான்; நாங்கள் விஜயகாந்தை பார்த்து வளர்ந்தவர்கள். எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். சரியான திட்டமிடல் இல்லாமல் விஜய் பரப்புரை செய்ததாக கூறிய அவர், விஜயகாந்தை மற்றவர்களுடன் (விஜய்) ஒப்பிட்டு பேசுவது தவறு என்றும், தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.