News October 4, 2025
பிப்ரவரியில் ரிலீஸாகும் தனுஷின் அடுத்த படம்

பீரியட் மற்றும் திரில்லர் ஜானரில் உருவாகும் தனுஷின் 54-வது படத்தை போர்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். மூன்று மாதத்திற்கு முன் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியிட முடிவு செய்துள்ளதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 4, 2025
BREAKING: இந்திய அணிக்கு புதிய கேப்டன்

ஆஸி., அணிக்கு எதிரான ODI தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில்(கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், KL ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல், ஜெய்ஸ்வால். முதல் போட்டி வரும் 19-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
News October 4, 2025
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!

கரூர் துயர சம்பவம் எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, விஜய் மீது ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டக் கூடாது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை வைத்து விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சிலர் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் வீட்டிலேயே முடங்கிவிடாமல் வெளியே வரவேண்டும் எனவும் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
News October 4, 2025
சச்சினுக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா

வெ.இண்டீஸுக்கு எதிரான தொடரில் சதத்துடன், 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் டெஸ்டில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்றவர்கள் பட்டியலில் ஜடேஜா(11) 2-வது இடத்திற்கு முன்னேறினார். 14 ஆட்ட நாயகன் விருதுகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். டெஸ்டில் ஜடேஜா 3,990 ரன்களை, 334 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.