News July 24, 2024

ஆகஸ்டில் தனுஷ் இயக்கத்தில் புதிய படம்: எஸ்.ஜே.சூர்யா

image

தனுஷ் தனது 4ஆவது படத்தை விரைவில் இயக்க உள்ளதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனுஷ் உடன் நித்யா மேனன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே தகவலை நடிகர் பிரகாஷ் ராஜ் சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தார். ஏற்கெனவே இருவரும் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Similar News

News March 11, 2026

வங்கியில் 1,300 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1,300 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர், அசிஸ்டண்ட் மேனேஜர் பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி, 2 ஆண்டு பணி அனுபவம் தேவை. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். ஆண்டுக்கு சம்பளமாக ₹6.14 லட்சம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

News March 11, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 11, மாசி 27 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 11, 2026

ஈரானின் கண்ணிவெடியால் டிரம்ப் ஆவேசம்!

image

<<19350594>>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் <<>>வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையெனில், இதற்கு முன் கண்டிராத அளவில் இராணுவ நடவடிக்கை இருக்கும் என்று கூறியுள்ளார். அந்த கண்ணிவெடிகளை அகற்றினால், ஈரான் சரியான திசையில் நகரும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!