News August 12, 2025
உயிருக்கு போராடும் நடிகருக்கு உதவிய தனுஷ்

துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு சீரிஸாக இருக்கிறார். உதவிக்கு கூட ஆள் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் உயிர்போகும் என்ற பரிதாப நிலையில் இருக்கும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு ₹5 லட்சம் கொடுத்துள்ள நடிகர் தனுஷ், ‘நண்பா மீண்டும் வந்துவிடுவாய்’ என ஆறுதல் கூறியிருக்கிறார்.
Similar News
News August 12, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான <<17356042>>அபராத வட்டியை தள்ளுபடி<<>> செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக, வட்டி முதலாக்கத்தின் (interest on capitalization) மீது விதிக்கப்பட்டுள்ள வட்டியும் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலுவையை செலுத்திவிட்டு சொத்து விற்பனை பத்திரத்தை பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
News August 12, 2025
யாருக்கும் யாரும் அடிமை இல்லை: CM ஸ்டாலின் பதிலடி

அடிமைத்தனத்தை பற்றி EPS பேசலாமா என கேள்வி எழுப்பியுள்ள CM ஸ்டாலின், இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை என பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்களுடன் இருப்பது தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி என்றார். DMK கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் அடிமைபோல் செயல்படுவதாக EPS கூறியிருந்த நிலையில், கம்யூனிஸ்ட்டுகளின் கோரிக்கைகளை தான் புறக்கணித்ததில்லை என CM கூறியுள்ளார்.
News August 12, 2025
ஐசிசி விருதை தட்டித் தூக்கிய கில்(லி)..!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி விருது வழங்கி வருகிறது. ஜூலைக்கான விருதை இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் வென்று அசத்தியுள்ளார். கடந்த மாதத்தில் மட்டும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 567 ரன்கள் குவித்திருந்தார். கேப்டனாக செயல்பட்டு இந்த விருதினை முதல் முறை வென்றது மிகவும் சிறப்பானது எனவும் இங்கிலாந்து தொடர் வாழ்வில் நிறைய கற்றுக் கொடுத்துள்ளதாகவும் கில் தெரிவித்துள்ளார்.