News November 16, 2024

இளையராஜாவாகவே மாறிய தனுஷ்!

image

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், ’நானும் ரவுடிதான்’ படப்பாடலை பயன்படுத்த நயன்தாராவிடம் தனுஷ் ராயல்ட்டி தொகை கேட்டிருக்கும் சம்பவம் அவரை இளையராஜாவுடன் ஒப்பிட வைத்துள்ளது. இளையராஜா அவ்வப்போது தன்னுடைய பாடல்களுக்கு ராயல்ட்டி கேட்பதால், இருவரையும் வைத்து மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Similar News

News March 2, 2026

22,195 பணியிடங்கள்.. இன்றே கடைசி வாய்ப்பு

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 22,195 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். கணினி வழித் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். 10-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ₹18,000 வழங்கப்படும். இந்த <>லிங்க்கில்<<>> அப்ளை செய்யவும். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த மார்ச் 4-ம் தேதி வரை அவகாசம் உள்ளது.

News March 2, 2026

யானை நெருஞ்சில் மூலிகையின் பயன்கள்!

image

சிறுநீரக கல் உள்பட உடலின் பல பிரச்னைகளை யானை நெருஞ்சில் மூலிகை தீர்க்கும் என கூறப்படுகிறது. இதன் இலை, வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். யானை நெருஞ்சிலை வேருடன் பிடுங்கி 1 லிட்டர் நீரில் கொதிக்கவிட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி 50 மில்லி அளவில் வாரத்திற்கு 4-5 முறை குடிக்கலாம். இதனால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு நீங்குமாம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல், பால்வினை தொற்றுகள் குணப்படுமாம்.

News March 2, 2026

மார்ச் 2: வரலாற்றில் இன்று

image

*1896–தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்தநாள் *1917–லாரி பேக்கர் பிறந்தநாள் *1918–நடிகர் ரஞ்சன் பிறந்தநாள் *1923–நடிகை சுந்தரிபாய் பிறந்தநாள் *1930–உப்பு சத்தியாகிரகத்திற்காக காந்தி, தண்டியை நோக்கி 240 மைல் நடைப்பயணத்தை தொடங்கினார் *1935–குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்தநாள் *1949-சரோஜினி நாயுடு நினைவு நாள் *1963–வித்யாசாகர் பிறந்தநாள் *1968–நடிகர் டேனியல் கிரெய்க் பிறந்தநாள்

error: Content is protected !!