News March 17, 2025
பக்தர் பலி: டிடிவி கண்டனம்

திருச்செந்தூர் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற துயர சம்பவம் நிகழ, இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவர், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கூட்ட நெரிசலை சமாளிக்க முறையாகத் திட்டமிட வேண்டும் என திமுக அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.
Similar News
News March 17, 2025
அதிமுகவில் பிளவா? இபிஎஸ் பதில்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்சிடம் அதிமுகவில் பிளவு ஏற்படப் போவதாக வெளியாகும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை என்று கூறினார். தாம் முதல்வரானது முதல் அதிமுகவை உடைக்க முயற்சி நடந்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும், அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள்தான் உடைந்து போவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
News March 17, 2025
வந்தே பாரத் ரயில் வேகம் குறைய என்ன காரணம்?

நவீனமடைந்து வரும் இந்திய ரயில்வே, அதிவேக சேவையை வழங்க வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்தது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஆனால், அதன் வேகம் குறைக்கப்பட்டதால் பார்லிமென்டில் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் மீது எந்த குறையும் இல்லை; தண்டவாள உள்கட்டமைப்புகள் தான் அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.
News March 17, 2025
அப்பாவு மாறவே இல்லை: EPS

சபாநாயகர் அப்பாவு மீண்டும் பழையபடியே செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று காலை அவையில் பேசிய EPS, எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சு நேரலை செய்யப்படுவதில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த பின்னரும் கூட சபாநாயகர், இன்றைய தனது பேச்சை நேரலை செய்யவில்லை என்று EPS சாடியுள்ளார்.