News August 26, 2024
தெய்வீக லட்சியங்களுக்கு அர்ப்பணிப்போம்: ஜனாதிபதி

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வாழ்த்து கூறியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணிக்க இந்த விழா நம்மை தூண்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், கிருஷ்ணன்-அர்ஜுனன் இடையிலான உரையாடல் மனிதகுலத்திற்கு உத்வேகம் மற்றும் அறிவொளியின் நித்திய ஆதாரம் என்றுள்ளார். மேலும், நாட்டின் முன்னேற்றம், செழிப்புக்காக உழைக்க உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News January 22, 2026
தேர்தல் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை: GK மணி

அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தரப்பு திமுகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என GK மணி தெரிவித்துள்ளார். மேலும் திருமாவளவன் இருக்கும் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைய முடியுமா என்ற கேள்விக்கு, அரசியலில் என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என அவர் பதில் அளித்துள்ளார்.
News January 22, 2026
ஜெயலலிதா வருமான வரி வழக்கில் அதிரடி உத்தரவு!

ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், வரி வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு சென்னை HC உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசான ஜெ.தீபா & தீபக் ஆகியோருக்கு, அவர் செலுத்த வேண்டிய ₹36 கோடி வரியை வசூலிக்கும் வகையில் IT நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், வரி பாக்கி குறித்து 2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்யும்வரை, வரி வசூலை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
News January 22, 2026
திமுகவில் கூண்டோடு இணைகின்றனர்.. OPS அதிர்ச்சி

CM ஸ்டாலின் தலைமையில் வைத்திலிங்கம் முன்னிலையில், தானும் திமுகவில் இணையவுள்ளதாக அதிமுக Ex MLA குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். ஜன.26-ல் தஞ்சையில் நடைபெறும் விழாவில் தன்னுடன் 250 பேர் திமுகவில் சேரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், வைத்திலிங்கம், தற்போது ராமச்சந்திரன் என அடுத்தடுத்து OPS-ன் ஆதரவாளர்கள் இணைவது பேசுபொருளாகியுள்ளது.


