News March 12, 2025
இந்திக்கு பதிலாக இந்தியாவை வளருங்கள்: ஸ்டாலின்

மோடி என்றால் வளர்ச்சி என பாஜகவினர் கூறுகிறார்களே, அப்படி என்ன இந்தியாவை அவர் வளர்த்துவிட்டார்? என ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதுதான் வளர்ச்சியா? என வினவிய அவர், இந்திக்கு பதிலாக இந்தியாவை வளர்க்கும் வழியை பாருங்கள் என்றும் சாடினார். மேலும், உயிரே போனாலும் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம் எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
Similar News
News March 13, 2025
EV கார் தயாரிப்பில் இருந்து பின் வாங்கிய லேண்ட் ரோவர்

தமிழ்நாட்டில் அமையவிருக்கும் தொழிற்சாலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து EV கார்களை தயாரிக்க இருந்த திட்டத்தை ஜாக்குவார் லேண்ட் ரோவர் கைவிட்டுள்ளது. உள்ளூரில் EV பாகங்களுக்கான சரியான விலை, தரம் தொடர்பான கவலைகள் எழுந்ததால், இத்திட்டம் கடந்த 2 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், EVஐ விட Hybrid கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதும் இம்முடிவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
News March 13, 2025
பெண்கள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம்.. உ.பி. அரசு அறிவிப்பு

பெண்கள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஜான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முக்யமந்திரி சமுஹிக் விவாக் யோஜனா திட்டத்தின்கீழ் மாநிலத்தில் திருமணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என கூறினார். படிப்பில் சிறந்த மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள் வழங்கப்படும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
News March 13, 2025
ராசி பலன்கள் (13.03.2025)

➤மேஷம் – அச்சம் ➤ரிஷபம் – சுகம் ➤மிதுனம் – ஆக்கம் ➤கடகம் – சலனம் ➤ சிம்மம் – ஆர்வம் ➤கன்னி – சிரமம் ➤துலாம் – ஊக்கம் ➤விருச்சிகம் – நலம் ➤தனுசு – லாபம் ➤மகரம் – இரக்கம் ➤கும்பம் – ஜெயம் ➤மீனம் – புகழ்.