News September 28, 2024
‘தேவரா – 1’ ₹172 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்

‘தேவரா – 1’ திரைப்படம் உலகம் முழுவதும் ₹172 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான இப்படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Similar News
News December 20, 2025
பாரம்பரிய மருத்துவத்தில் யோகாவும் உள்ளது: PM மோடி

பாரம்பரிய மருத்துவத்திற்கான 2-வது WHO சர்வதேச உச்சிமாநாட்டின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய PM மோடி, உலகம் முழுவதும் ஆரோக்கியம், சமநிலை, நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பாதையை யோகா காட்டியுள்ளதாக கூறியுள்ளார். பாரம்பரிய மருத்துவ முறைகளில் யோகாவும் அடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். யோகாவின் மேம்பாட்டிற்கு பங்களித்த ஒவ்வொரு நபரையும் தான் பாராட்டுவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
News December 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 20, மார்கழி 5 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: பிரதமை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News December 20, 2025
இவ்வளவு நபர்களுக்கு முகவரி இல்லையா? ப. சிதம்பரம்

வரைவு வாக்காளர் பட்டியலின்படி TN-ல் முகவரி இல்லையென 66,44,881 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். எல்லா அரசியல் கட்சி தோழர்களும் இந்த எண்ணில் கவனம் செலுத்தவேண்டும் எனவும், உண்மையான நபர்கள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதுதான் நம்முடைய நோக்கம் என்றும் கூறியுள்ளார்.


