News April 19, 2024

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த தேவா

image

நடிகர் தனுஷ் எழுதி இயக்கி நடித்துவரும் ராயன் படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு வந்த வாய்ப்பை இசையமைப்பாளர் தேவா மறுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “வடசென்னை தமிழில் நான் நன்றாக பேசுவதால், காசிமேடு பகுதியை மையப்படுத்திய ‘ராயன்’ படத்தில் வில்லனாக நடிக்க முடியுமா என என்னிடம் கேட்டார்கள். ஆனால், நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. தெரியாத தொழிலை நான் எப்போதுமே செய்ய மாட்டேன்” என்றார்.

Similar News

News January 18, 2026

சற்றுமுன்: விஜய் அறிவித்தார்

image

ஜனவரி 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. TN மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு அறிக்கை தயாரிக்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திமுகவும், அதிமுகவும் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து வருவதால், விஜய்யும் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு தேர்தல் அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

News January 18, 2026

திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை: ரகுபதி

image

திமுக கூட்டணி உடையும் என்ற சிலரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் கிடையாது என்றவர், காங்கிரஸ் தங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது எனவும் அனைவரையும் அரவணைப்பதே CM ஸ்டாலினின் பழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News January 18, 2026

ரசிகர்களை நிச்சயம் பெருமைப் படுத்துவேன்: அஜித்

image

துபாய் ரேஸில் கார் விபத்தில் சிக்கியதால் ஏமாற்றமடைந்த ரசிகர்களிடம் நடிகர் அஜித் Sorry கேட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்களுக்கு, தான் ரேஸ் ஓட்டுவதையும், எங்களது அணி வெல்வதை பார்க்க முடியாததும் வருத்தம் அளிப்பதாக அஜித் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் ரசிகர்களை பெருமைப்படுத்தும் என அஜித் சத்தியம் செய்துள்ளார்.

error: Content is protected !!