News September 27, 2025
ஆஸி., நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு கெளரவம்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இசையமைப்பாளர் தேவாவுக்கு அங்குள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு அவரை அழைத்துச் சென்ற தமிழர்கள், அவரை சபாநாயகரின் இருக்கையில் அவரை அமர வைத்து, கையில் செங்கோல் கொடுத்துக் கெளரவித்தனர். தனக்கு கொடுக்கப்பட்ட கௌரவத்தால் தேவா மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
Similar News
News January 21, 2026
காங்., செயற்குழு கூட்டத்தில் MP-க்கள் பங்கேற்காதது ஏன்?

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில், ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்ட 7 MP-க்கள் பங்கேற்கவில்லை. இதனால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அவர்கள் டெல்லியில் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை என்று தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறினார்.
News January 21, 2026
₹10 லட்சம் கோடி இழப்பு

ஐரோப்பா மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளின் சரிவு இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் வர்த்தகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சந்தை மூலதனம் சுமார் ₹10 லட்சம் கோடி சரிந்தது. முதலீட்டாளர்களுக்கு இது பெரும் இழப்பு.
News January 21, 2026
புவிசார் குறியீடு: 2-வது இடத்தில் தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இதுவரை 74 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புவிசார் குறியீடு பெற்றதில், இந்தியாவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 74 பொருட்களில் கைவினைப் பிரிவில் – 38, உணவுப் பிரிவில் – 9, உற்பத்திப் பிரிவில் – 3, விவசாயப் பிரிவில் – 24 என கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் 77 பொருள்களுடன் முதலிடத்தில் உள்ளது.


