News March 18, 2024
கடலூர் மாவட்டத்தில் லோக்சபா தொகுதிகள் விவரம்!

நாடாளுமன்றத் தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை கடலூர், சிதம்பரம் என 2 லோக்சபா தொகுதிகள் உள்ளது.கடலூர் தொகுதியில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சிதம்பரம் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, அரியலூர் மாவட்டம், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம் என 6 தொகுதிகள் உள்ளன
Similar News
News August 8, 2025
கடலூர்: அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை

மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைத் திட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் கடலூரில் இன்று (ஆக.8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 8, 2025
கடலூர்: சிறப்பு முகாமை ஆய்வு செய்த மேயர்

கடலூரில் இன்று (ஆகஸ்ட் 08) வார்டு 10,11,12 ஆகிய பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த முகாமில் 10, 11 மற்றும் 12 ஆம் வார்டுகளுக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் அட்டையில் முகவரி மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற்றனர்.
News August 8, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக வகைமாற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.