News September 4, 2025
BREAKING: சோப்பு, டூத் பேஸ்ட் விலை குறைகிறது

அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைக்கு தேய்க்கும் எண்ணெய், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப், ஷேவிங் கிரீம் விலை குறையும். சமையல் பாத்திரங்கள் மற்றும் பிறந்த குழந்தைக்கு பயன்படும் பொருள்களின் மீதான வரியும் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தையல் இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள் மீதான வரியும் 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
டீ, காபி விலை குறையுமா?

காபிக்கு தேவையான வறுத்த சிக்கோரி, எசன்ஸ் உள்ளிட்டவற்றிற்கான GST வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்ஸ்டன்ட் டீ, Iced டீ பவுடர் ஆகியவற்றிற்கும் 5% ஆக GST குறைக்கப்பட்டுள்ளது. இதனால் டீ, காபியின் விலை குறைய வாய்ப்புள்ளது. சமீபத்தில் தான் டீ, காபியின் விலை முறையே ₹15, ₹20 என உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்த GST மாற்றம், வரி செலுத்தும் வருமான வரம்பிற்கு உட்பட்ட ஓட்டல்களுக்கே பொருந்தும்.
News September 4, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 4, ஆவணி 19 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை
News September 4, 2025
இந்த பொருள்களுக்கெல்லாம் இனி GST கிடையாது

*33 அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள், அரிய நோய்களுக்கான மருந்துகள்.
*தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடுகள்.
*நோட்புக்ஸ், பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்கள்.
*UHT பால், பனீர், பீட்சா பிரட், சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி.
56-வது GST கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்த GST சீர்திருத்தங்கள், செப்.22 முதல் அமலுக்கு வருகிறது.