News March 16, 2024
அரசியல் கட்சியினரின் சுவரில் வரையப்பட்ட சின்னங்கள் அழிப்பு

தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச்.20 ஆம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கோவையில் பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் உடனடியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
Similar News
News January 4, 2026
மருதமலையில் இப்படி ஒரு ரகசியமா?

மருதமலை முருகனை தரிசிக்க பலமுறை நாம் சென்றிருப்போம். ஆனால் மலையேறும் வழியில் ஒரு ரகசியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா. ஆம், மலையில் 18ம் படியை கடந்தால் மலைச்சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்தில் இருக்கும். அந்த 3 கற்களும் 3 திருடர்களாம். மருதமலையில் உண்டியலை திருடி சென்றபோது, அவர்களை பிடித்த முருகன், ‘ நீவிர் கற்சிலைகளாக கடவீர்’ என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் சிலையானார்களாம். (SHARE)
News January 4, 2026
கோவை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு

டிஜிட்டல் யுகத்தில் UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், G-Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். (SHARE பண்ணுங்க)
News January 4, 2026
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை– சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஜன-11, 18 தேதிகளில் கோவையிலிருந்து சென்னைக்கும், ஜன-12, 19 தேதிகளில் சென்னையிலிருந்து கோவைக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் போத்தனூர்–சென்னை, சென்னை–போத்தனூர், மங்களூரு–சென்னை, செங்கோட்டை–போத்தனூர் வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.


