News December 6, 2024

லாபம் வந்தாலும் ஊதியம் உயரவில்லை

image

நிறுவனங்களின் லாபம் உயர்ந்தும் ஊழியர்களின் ஊதியம் உயரவில்லை என மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கவலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்க இது சரியான தருணம் என்றார். கடந்த 4 ஆண்டுகளில் நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகவும், ஆனால் ஊழியர்களுக்கு ஊதிய பலன் பலவீனமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News August 28, 2025

உயிரிழந்த தவெக தொண்டர்… உதவிக்கரம் நீட்டிய தலைமை

image

விபத்தில் உயிரிழந்த தொண்டரின் குடும்பத்திற்கு தவெக தலைமை நிதியுதவி அளித்துள்ளது. மதுரை மாநாட்டில் பங்கேற்ற தஞ்சையை சேர்ந்த ஜெயசூர்யா வீடு திரும்பும் போது உயிரிழந்தார். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயசூர்யாவின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி, கூடுதல் உதவிகளை செய்ய தயார் எனவும் உறுதியளித்தனர்.

News August 28, 2025

வசமாக சிக்கிய நடிகை லட்சுமி மேனன்?

image

ஐடி ஊழியரை கடத்தி, தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு செப்.17 வரை முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைதாகியுள்ள அவரது நண்பர்கள் மீது தங்க கடத்தல், அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸ் முடிவு செய்துள்ளது. இதனால், முன்ஜாமின் கெடு முடிந்த பிறகு லட்சுமி மேனன் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

News August 28, 2025

ஆசியக் கோப்பை: மெளனம் கலைத்த ஷமி

image

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாதது பேசுபொருளானது. இதுதொடர்பாக பேசிய அவர், துலீப் டிராபி தொடரில் தன்னால் ஒரு போட்டியில் 5 நாள்கள் விளையாடும்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாட முடியாதா என கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்திய அணியின் வெற்றிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தேர்வுக் குழுவின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். ஷமியை தேர்வு செய்யாதது பற்றி என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!