News January 11, 2025
வேலையை விட்டு விவசாயத்தில் ஈடுபட ஆசை

திருச்சி மாவட்டம் முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், தனது ஆளுநர் வேலையை விட்டுவிட்டு, விவசாயத்திற்கு சென்றுவிடலாம் என ஆசைப்படுவதாக கூறினார். மேலும், தானும், தனது மனைவியும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிட்ட ஆளுநர், உலகுக்கே உணவு கொடுப்பவர்கள் விவசாயிகள் எனவும் புகழாரம் சூட்டினார்.
Similar News
News January 17, 2026
நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்: EPS

MGR பிறந்தநாளான இன்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் சபதம் எடுக்க EPS வலியுறுத்தியுள்ளார். ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்ற MGR பாடலை மேற்கோள் காட்டி, அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, வரும் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு தொண்டரும் கடுமையாக உழைக்க சபதம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
News January 17, 2026
4 மாசத்துக்கு மோடி இப்படி தான் பேசுவார்: கார்த்தி சிதம்பரம்

PM மோடி வரும் 23-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள MP கார்த்தி சிதம்பரம், ‘PM மோடி தமிழகம் வந்தாலே தமிழ் கலாசாரம் பிடிக்கும், இட்லி-தோசை தான் சாப்பிடுவேன், பாரதியார் கவிதை கேட்டால்தான் தூக்கமே வரும் என பேசுவார்’ என்று விமர்சித்துள்ளார். தான் திருக்குறளை கேட்காத நாளே இல்லையென மோடி இன்னும் 4 மாதத்துக்கு சொல்லுவார் எனவும் அவர் கிண்டல் செய்துள்ளார்.
News January 17, 2026
திமுக கூட்டணியில் இருந்து விலகவுள்ளாரா?

திமுக கூட்டணியில் ராமதாஸை இணைக்க திமுக பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக திருமாவை அவர்கள் சமாதானம் செய்து வருகிறார்களாம். ஆனால் இதில் உடன்பாடு இல்லாததால், ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடுமென திருமா, திமுக தலைமையிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுமா என தவெக கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறதாம்.


