News August 11, 2024

PT உஷாவாக நடிக்க ஆசை: மாளவிகா

image

முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். அவர் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு, X தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு, “பி.டி.உஷா” என்று மாளவிகா பதிலளித்தார்.

Similar News

News March 6, 2026

மேகதாது விவகாரம்.. தமிழகத்துக்கு பின்னடைவு

image

மேகதாது அணைக்கு எதிராக SC-ல் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இது கர்நாடகாவுக்கு கிடைத்த வெற்றி என்று, பட்ஜெட் உரையில் அம்மாநில CM சித்தராமையா கூறியிருக்கிறார். அத்துடன், இத்திட்டம் தொடர்பாக புதிய திருத்தப்பட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் எனவும், விரைவில் அது மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

News March 6, 2026

மகளிர் உரிமைத் தொகை.. அமைச்சர் புதிய அறிவிப்பு

image

திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் முக்கிய அறிவிப்புகள் & சில வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிடுவார் என்று அமைச்சர் KN நேரு கூறியுள்ளார். கடந்த தேர்தலில் இங்குதான் மகளிர் உரிமைத் தொகை பற்றிய அறிவிப்பு வெளியானது, இம்முறையும் உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்விக்கு, நிதி நிலைமைக்கு ஏற்ப தகுந்த அறிவிப்புகள் மகளிருக்கு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News March 6, 2026

சிறுவர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பயன்படுத்த தடை

image

சோஷியல் மீடியாக்கள் மாணவர்களின் கவனத்தை சிதறடிப்பதாகவும், அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாகவும் தொடர் விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில், கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் X, இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இதனை தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

error: Content is protected !!