News September 10, 2024
பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.1.22 லட்சம் பேரில் 85,000 ஆசிரியர்கள் பணிக்கு வந்துவிட்டனர். 37,500 (30%) ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது.
Similar News
News August 18, 2025
சீக்கிரம் வேலை கிடைக்க இதுல அப்ளை பண்ணுங்க

இளைஞர்கள் LinkedIn, Naukri-ல வேலைக்கு அப்ளை பண்றது வழக்கம். இந்த தளங்கள்ல வேலைக்கு அப்ளை பண்றவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்குறதுனால நம்ம Profile shortlist ஆகுறது கடினமான விஷயமா இருக்கு. இதனால LinkedIn-க்கு பதிலா /UPlers.com, /Glassdoor.com தளங்கள்ல வேலைக்கு அப்ளை பண்ணா எளிதில் Profile shortlist ஆகி வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமா இருக்கு. செக் பண்ணி பாருங்க. SHARE
News August 18, 2025
மாணவர்களிடம் அதிகரிக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு (1/2)

கோவை PSG மருத்துவக் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. கிராமங்களில் 400 மாணவர்கள் உட்படுத்தப்பட்டதில், 16% பேருக்கு பெரியவர்களுக்கு வரக்கூடிய டைப்-2 நீரிழிவு பாதிப்பு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாம். நகர்புறங்களில் பீஸ்ஸா, பர்கர் உள்ளிட்ட துரித உணவு கலாசாரத்தை அதிகம் கொண்டுள்ள மாணவர்கள் மத்தியில் பாதிப்பு மேலும் அதிகரிகரிக்கக்கூடுமாம்.
News August 18, 2025
மாணவர்களிடம் நீரிழிவு பாதிப்பை குறைக்க வழிகள்(2/2)

10-15 வயதுள்ள 100 மாணவர்களில் 6-7 பேர் தூக்கமின்மை பிரச்னைக்கு மருந்து உட்கொள்வது PSG கல்லூரியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை போக்க, *குழந்தைகள் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். *அனைத்து வகை பள்ளிகளிலும் தினமும் 1 மணி நேரம் கட்டாயம் விளையாட்டு. *சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து துரித உணவுகளை தவிர்க்க, குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.