News September 30, 2024
துணை முதல்வர் உதயநிதி இன்று மதுரை பயணம்

துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி முதல் பயணமாக இன்று மதுரை செல்லவுள்ளார். நாளை மதுரையில் பல்வேறு நலத்திட்ட தொடக்க விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார். அதனை தொடர்ந்து விருதுநகரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இளைஞரணி செயலாளராக கடந்த 2019இல் அவர் பொறுப்பேற்ற பிறகு, மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 26, 2025
சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும்: வேலுமணி அட்டாக்

தவெக மாநாட்டில் ஸ்டாலின், EPS என யாரையும் விட்டு வைக்காமல், விஜய் அட்டாக் செய்ததுதான் தற்போது பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில், இபிஎஸ் பற்றி பேச தவெக தலைவர் விஜய்க்கு உரிமையில்லை என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி கட்சி தொடங்கிய சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டு போய்விட்டார்; அதே நிலைதான் விஜய்க்கும் வரும் என்று சாடியுள்ளார்.
News August 26, 2025
விஜய்க்கு எதிராக போட்டியிடும் பிரபல நடிகர் இவரா?

வரும் தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க பல ஸ்கெட்ச்களை போட்டு வருகிறது திமுக. இதில் ஒரு ஸ்கெட்ச்சாக, விஜய் போட்டியிடும் தொகுதியில் விஷாலை களமிறக்க உதய் தரப்பு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. உதய்யின் நெருங்கிய நண்பர் என்பதால் விஷாலும் இதனை ஏற்பார் என பேசப்பட்ட நிலையில், ’நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார் விஷால். ஒருவேளை இருக்குமோ?
News August 26, 2025
கொழுப்பை கரைக்கும் லெமன்கிராஸ் டீ!

எலுமிச்சை போன்ற மணத்தை கொண்டிருந்தாலும், லெமன்கிராஸ் இனிப்பு தன்மையுடையது. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் லெமன்கிராஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உடல் சோர்வை போக்க லெமன்கிராஸ் டீயை தினந்தோறும் பருகலாம். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் லெமன்கிராஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. சீரான அளவில் தினமும் லெமன்கிராஸ் டீயை அருந்தினால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.