News May 22, 2024
துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்?

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்ட போதே, அவருக்கு துணை முதல்வர் பதவி தரப்படலாம் எனப் பேசப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு விளையாட்டுத் துறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ள ஸ்டாலின், அப்போது உதயநிதியை துணை முதல்வராக்க தீர்மானித்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 20, 2025
BREAKING: திமுகவுடன் கூட்டணி.. உறுதியாக அறிவித்தார்

திமுக – காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக செய்தி வெளியாகி வருகிறது. மேலும், தவெக- காங்., இடையே பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என செல்வப் பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
கவர்னரை கருணாநிதி பதிலால் சாடிய கனிமொழி

மசோதாக்கள் தொடர்பான வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என SC கூறியது. இந்நிலையில், உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது? என்று கேட்டபோது, கவர்னர் வேலை பார்ப்பது என்று முன்னாள் CM கருணாநிதி கூறியதாக கனிமொழி மேற்கோள் காட்டியுள்ளார். இனியாவது அரசமைப்புக்கு உட்பட்டு கவர்னர், தனது பணியை செவ்வனே செய்வார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
SC அளித்தது தீர்ப்பு அல்ல: P.வில்சன்

நியாயமான காலத்துக்குள் மசோதா மீது கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என <<18341479>>SC<<>> இன்று கூறியது. இதற்கு முன்பு, 3 மாதங்களுக்குள்ளாக ஒப்புதல் வழங்க வேண்டும் என SC தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இன்று SC கூறியது கருத்து மட்டுமே, உத்தரவோ தீர்ப்போ அல்ல என்று திமுக வழக்கறிஞர் P.வில்சன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் SC ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை தற்போதைய கருத்து பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.


