News November 23, 2024
இன்று உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, தென் தமிழகத்தில் கனமழைக்கும், 25 – 28ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 7, 2025
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயின் நன்மைகள்!

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல வித உடல்நல பிரச்னைகளுக்கு இது சுவையான தீர்வாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதை சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.
News November 7, 2025
அன்புமணி புதிய கட்சி தொடங்கலாம்: ராமதாஸ்

பாமக பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி பக்கம் உள்ள கும்பலில் 21 பேர் இருப்பதால், அதை பயன்படுத்தி அவர் புதிய கட்சி தொடங்கி கொள்ளட்டும் என்று ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். அக்கட்சிக்கு பொருத்தமான பெயரை தானே சொல்வதாகவும், ஆனால் அன்புமணிக்கு பாமகவுடனும், தன்னுடனும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், ராமதாஸ் கூறியுள்ளார்.
News November 7, 2025
பாஜக மீது சாஃப்ட் கார்னர் காட்டும் விஜய்?

கரூர் துயருக்கு பிறகு BJP மீது விஜய் சாஃப்ட் கார்னர் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பரப்புரைகளில் பாசிசம் என BJP-ஐ விமர்சித்து வந்த விஜய், தற்போது பொதுக்குழுவில் அதே மாதிரி ஒரு வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை என்கின்றனர். SIR-க்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தில் கூட EC-ஐ மட்டுமே சாடியுள்ளதால் ADMK-BJP கூட்டணிக்கு விஜய் அச்சாரம் போடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவிக்கின்றனர்.


