News April 29, 2024

நேர்மைத் தன்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட்!

image

பொதுநல வழக்கில் நேர்மைத் தன்மையை நிரூபித்தால் மட்டுமே ரூ.3.5 லட்சம் டெபாசிட்டை மனுதாரருக்கு திருப்பித் தர முடியுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான தனது வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், டெபாசிட்டைத் திருப்பித் தரக் கோரிக்கை விடுத்தார். இதற்கு, வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கவில்லையென உயர் நீதிமன்றம் விளக்கமளித்தது.

Similar News

News August 27, 2025

பிஹார் புறப்பட்டார் CM ஸ்டாலின்

image

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கூறி, பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். இந்நிலையில், இதில் பங்கேற்பதற்காக CM ஸ்டாலின் பிஹார் புறப்பட்டுள்ளார். சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர், 10.30 மணிக்கு யாத்திரையில் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். இதனையடுத்து, பிற்பகல் 2.40 மணிக்கு CM சென்னை திரும்புகிறார்.

News August 27, 2025

ஸ்டாலின் Vs இபிஎஸ்.. சொத்து மதிப்பில் யார் டாப்?

image

பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில், ₹8.8 கோடி சொத்துகளுடன் CM ஸ்டாலின் 14-வது இடம் பிடித்தார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் EPS-யின் சொத்து பின்னணி குறித்து அறிய பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர். 2021-ன் படி, EPS ₹6 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கிறார். ஸ்டாலினுடன் ஒப்பிடுகையில் EPS சொத்து மதிப்பு ₹2 கோடி குறைவு. இன்னும் 8 மாதங்கள் காத்திருந்தால் லேட்டஸ்ட் சொத்து விவரங்கள் தெரிந்து விடும்.

News August 27, 2025

விநாயகர் சதுர்த்தியில் இந்த தவறுகளை பண்ணாதீங்க!

image

வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் போது, கண்டிப்பாக இந்த தவறுகளை செய்யக் கூடாது:
1. வாங்கி வரும் விநாயகர் சிலையின் தும்பிக்கை வலது புறமாக இருக்கக்கூடாது.
2. விநாயகர் சிலையை தனியாக வைக்காமல், லட்சுமி அல்லது சிவன்- பார்வதி, முருகன் விக்ரகம் அல்லது படத்துடன் சேர்த்து வைக்கவேண்டும்.
3. துளசி தேவி விநாயகரால் சபிக்கப்பட்டவர் என்பதால், விநாயகருக்கு துளசி வைக்கக்கூடாது. SHARE IT.

error: Content is protected !!