News March 30, 2024

தமிழக ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பதா?

image

தமிழக ரயில்வே ஊழியர்கள் தபால் ஓட்டு போட முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அருகில் உள்ள கேரளா, கர்நாடகா மாநில ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழக ஊழியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் ஆணையம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Similar News

News March 31, 2026

லிவ்-இன் உறவில் இருந்தாலும் தம்பதியரே

image

நாடு முழுவதும் நாளை முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது. இந்நிலையில் நிலையான லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பில் ‘திருமணமானவர்கள்’ என பதிவு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இருவரும் தாங்கள் நிலையான உறவில் இருப்பதாக தெரிவித்தால், அதற்கு சட்டப்பூர்வ சான்றிதழ்கள் எதுவும் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

News March 31, 2026

வெள்ளி விலை ஒரு மாதத்தில் கிலோ ₹75,000 குறைந்தது

image

தங்கத்தைப் போல் வெள்ளி விலையும் மார்ச் மாதத்தில் பெரிய அளவில் குறைந்துள்ளது. 1 கிலோ வெள்ளி ₹75,000 குறைந்துள்ளது. மார்ச் 1-ல் 1 கிராம் ₹325, கிலோ ₹3.25 லட்சத்துக்கு விற்பனையை தொடங்கிய வெள்ளி, மாத முடிவில் (மார்ச் 31) 1 கிராம் ₹250, 1 கிலோ ₹2.50 லட்சத்துக்கு விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 31, 2026

விமான எரிபொருள் வரியை குறைக்க வலியுறுத்தல்

image

மேற்காசிய போர் காரணமாக விமான எரிபொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில், விமான எரிபொருள் மீதான VAT வரியை மாநில அரசுகள் குறைக்குமாறு விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் VAT வரி 25%, மகாராஷ்டிராவில் 18% & தமிழகத்தில் 29% ஆக உள்ளது. இவற்றை குறைத்தால், விமான டிக்கெட்டுகள் மீதான விலையேற்றம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!