News April 22, 2025
டாஸ்மாக் பற்றி பேச அனுமதி மறுப்பு: அதிமுக வெளிநடப்பு

டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் அதிமுக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து இபிஎஸ் பேச எழுந்தபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. அப்போது என்ன பயமா? என இபிஎஸ் கேட்ட நிலையில், யாருக்கும் பயமில்லை என சபாநாயகர் பதிலளித்தார். அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News September 16, 2025
சற்றுமுன்: வரலாறு காணாத விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தை போன்றே, வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1 உயர்ந்து ₹144-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,44,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹5000 அதிகரித்துள்ளது.
News September 16, 2025
நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 6 அரசு Apps

இந்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மக்களின் வசதிக்காக பல சேவைகளை செயலிகள் வாயிலாக வழங்கிவருகிறது. அரசு திட்டங்களின் பலனை பெறுவதற்கும், முக்கியமான பணிகளை எளிதாக்குவதற்கும் இந்த செயலிகள் உதவுகிறது. அந்த வகையில் உங்கள் ஃபோனில் கட்டாயம் இருக்கவேண்டிய 6 செயலிகள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் இதை SHARE செய்யுங்கள்.
News September 16, 2025
என்னை யாரும் மிரட்ட முடியாது: EPS

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று EPS-க்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இந்த கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், எதற்கும் அஞ்ச மாட்டேன், என்னை யாரும் மிரட்ட முடியாது என்று EPS தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் அவர்கள் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள் எனக் கூறி ஒருங்கிணைப்புக்கு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.