News May 6, 2024
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த செய்திகளுக்கு மறுப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்திகளுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) மறுப்புத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 4,750 மையங்களில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் இளநிலை தேர்வு நடைபெற்ற நிலையில், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. இதை மறுத்துள்ள தேசிய தேர்வு முகமை, அந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது, அதில் உண்மை இல்லை எனக் கூறியுள்ளது.
Similar News
News August 20, 2025
யாருடைய கரிசனமும் தேவையில்லை: பிரித்வி ஷா

இந்திய அணியில் இடம்பெறாதது, IPL-ல் விலை போகாதது என பின்னடைவுகளை சந்தித்து வரும் பிரித்வி ஷா, தனக்கு யாருடைய கரிசனமும் தேவையில்லை என தெரிவித்துள்ளார். சமீபத்திய உள்ளூர் போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடி, சதம் விளாசிய நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், தனது வாழ்க்கையில் பல மேடு, பள்ளங்களை சந்தித்துள்ளதால், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு மீண்டும் அணிக்கு திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
ஏன் இந்தியா மீது கூடுதல் வரி? USA சொன்ன ஷாக் காரணம்

இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளது USA. இதுதொடர்பாக ஆக.25-ல் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையும் ரத்தானது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவே இந்தியா மீது டிரம்ப் அரசு கூடுதல் வரி விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். NATO உள்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இதற்கு ஆதரவளித்துள்ளதாகவும் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
News August 20, 2025
BREAKING: தவெக மாநாட்டில் மீண்டும் பெரிய விபத்து

தவெக மாநாட்டில் பிற்பகலில் <<17463695>>கொடிக்கம்பம் விழுந்து<<>> கார் சேதமடைந்த விபத்தை தொடர்ந்து மற்றொரு விபத்து அரங்கேறியுள்ளது. மாநாட்டு திடலின் பிரதான நுழைவு வாயிலில் ராட்சத போக்கஸ் லைட்டுகள் கட்டப்பட்ட கம்பம் கீழே விழுந்து கண்ணாடி துண்டுகள் சிதறின. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மாநாட்டு ஏற்பாடுகளை கூடுதல் கவனத்துடன் செய்ய விஜய் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.