News August 15, 2024
BAN Vs PAK போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

BAN Vs PAK அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே வரும் 30ஆம் தேதி கராச்சியில் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன் டிராபி போட்டிக்காக கேலரிகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் இன்றி போட்டி நடக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Similar News
News September 14, 2025
நாற்காலிகளில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருக்கும் துளைகள் வெறும் டிசைன் கிடையாது. நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் போது அதற்கிடையில் காற்று புகும். அப்படி அடைபடும் காற்று, வெளியேறாவிட்டால் சேரை பிரித்தெடுப்பது சிரமமாக இருக்கும். இதனாலேயே இந்த துளைகள் போடப்பட்டிருக்கிறது. மேலும், துளைகளை போடுவதால் பிளாஸ்டிக்கின் தேவை குறைந்து, அது உற்பத்தி செலவை குறைக்கிறதாம். SHARE.
News September 14, 2025
அனைத்து பள்ளிகளிலும் நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. 6 – 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9 & 10ம் வகுப்பு செப்.15-26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.26 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் காலாண்டு விடுமுறையாகும். தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு Way2News சார்பில் வாழ்த்துக்கள்!
News September 14, 2025
RECIPE: ஹெல்தியான ராகி லட்டு!

ராகி லட்டு கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்தை அளிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
➤1 தேக்கரண்டி நெய்யில், 1 கப் கேழ்வரகு மாவை வறுக்கவும்.
➤இதில் ஏலக்காய் பொடி, வேர்க்கடலையை சேர்த்து கலக்கவும்.
➤அதேபோல, வெல்லத்தை அரை கப் தண்ணீர் விட்டு, காய்ச்சி கொள்ளவும்.
➤காய்ச்சிய வெல்லப்பாகை மாவில் கலந்து உருண்டைகளாக பிடித்து எடுத்தால், சுவையான சத்தான ராகி லட்டு ரெடி. SHARE.