News October 19, 2025
டெங்கு அதிகரிக்கும்: பறந்தது உத்தரவு

பருவமழை காலத்தில் டெங்கு, ஃபுளு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதனால், அனைத்து மாவட்ட அரசு ஹாஸ்பிடல்களில் போதிய மருந்துகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். ஜெனரேட்டர்கள், ஆக்ஸிஜன் வினியோக அமைப்புகள் 72 மணி நேர தொடர் பயன்பாட்டுக்கு எரிபொருள் இருப்பை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் படுக்கைகளை அதிகரித்து தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
விஜய்யுடன் கூட்டணி வைத்தாலும் EPS தான் CM

தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் இபிஎஸ் தான் முதல்வர் என நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த கொடூரமான சம்பவத்தை பற்றி பேச விரும்பவில்லை. அதற்கான சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News October 19, 2025
சோகத்தில் ஆழ்த்திய Ro- Ko!

ஆஸி., எதிரான முதல் ODI-ல் இந்திய அணி 21/2 என தள்ளாடி வருகிறது. ரோஹித் 8 ரன்களிலும், கோலி ரன் இன்றியும் அவுட்டானது ரசிகர்களை பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. 7 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் Ro- Ko பெரிதாக சாதிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், அனைத்தும் சொதப்பி விட்டது. கில் 9* ரன்னிலும், ஷ்ரேயஸ் ஐயர் 2* ரன்னிலும் களத்தில் உள்ளனர். மீளுமா இந்தியா?
News October 19, 2025
தங்கம் விலை மளமளவென குறைந்தது.. காரணம் என்ன?

தங்கம் விலை கடந்த 17-ம் தேதியுடன்( ₹97,600) ஒப்பிடுகையில் சவரனுக்கு ₹1,600 குறைந்து ₹96,000-க்கு இன்று(அக்.19) விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைந்ததே நேற்றைய விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் இன்றும் அதே நிலைதான் நீடிக்கிறது. இதனால், தீபாவளியான நாளை தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.