News March 19, 2024
இன்று முதல் தேமுதிக விருப்ப மனு

தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் (மார்ச் 19, 20) சென்னை தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனு பெறலாம். பொதுத் தொகுதியில் போட்டியிட ₹15,000, தனித் தொகுதியில் போட்டியிட ₹10,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். தொடர்ந்து, மார்ச் 21ல் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடமும் நேர்காணல் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
சற்றுமுன்: கூட்டணிக்கு வர OPS, TTV-க்கு அழைப்பு

பாஜக கூட்டணியில் OPS, TTV இருக்க வேண்டும் என்று அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். EPS-க்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய செங்கோட்டையன், நேற்று அமித்ஷாவை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசியிருந்த நிலையில், அண்ணாமலையின் இந்த அழைப்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய OPS, TTV-ஐ அண்ணாமலை சரி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார்.
News September 9, 2025
PHOTO-ஐ பயன்படுத்த கூடாது.. வழக்கு போட்ட ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சையான செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்நிலையில், தனது தனிப்பட்ட தகவல்கள், வணிக ரீதியாகவோ, வேறு எந்த காரணத்துக்காகவோ தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார். மேலும், தனது அனுமதியின்றி பெயர், போட்டோ, குரல் உட்பட எந்தவொரு விவரத்தையும் பயன்படுத்த ஊடகங்கள், தனிநபர்களுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
News September 9, 2025
அதிமுகவை ஒன்றிணைக்க அமித்ஷாவிடம் பேசுவது ஏன்?

மக்களின் பேராதரவு பெற்ற ஒரு கட்சி பல அணிகளாக பிரிந்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவு தான். பிரிந்தவர்களை எப்படி ஒன்று சேர்க்க விரும்புவோர் 1)கட்சியின் மூத்தத் தலைவர்களை, அனுபவஸ்தர்களை அணுகி ஆலோசனை பெறலாம், மத்தியஸ்தம் பேச சொல்லலாம் 2)தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவை திரட்டலாம். ஆனால், அதிமுகவில் எதிர்ப்புக் குரல் எழுப்பும் தலைவர்கள் நேராக ஏன் அமித்ஷாவை சந்திக்கின்றனர்?