News March 24, 2025
மாலை 6 மணிக்கு வருகிறான் ‘ஜனநாயகன்’

அரசியல் களத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய்யின் கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News March 26, 2025
பிரேசிலை புரட்டி எடுத்த அர்ஜென்டினா.. 2026 WC தகுதி

2026 உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, பிரேசிலை எதிர்கொண்டது. இதில் 3வது நிமிடத்திலேயே முதல் கோலை அர்ஜென்டினா அடித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய அந்த அணி 4 கோல்களை அடித்து பிரேசிலை நிலைகுலைய வைத்தது. பதிலுக்கு ஒரு கோல் மட்டுமே பிரேசிலால் அடிக்க முடிந்தது. இதன் மூலம் 4 – 1 என்ற நிலையில் வெற்றி பெற்று அர்ஜென்டினா 2026 ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது.
News March 26, 2025
இல்லவே இல்லை; டென்ஷனான இபிஎஸ்!

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இபிஎஸ் சற்று பதற்றமானார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் ஊடகங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக, இப்படி கேட்பதா? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி மாறும் எனவும், தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விளக்கமளித்தார்.
News March 26, 2025
BREAKING: நாளை ஸ்டிரைக்.. சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி, நாளை முதல் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்கள் முழுவதும் இந்த ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால், கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.